மன். நானாட்டான் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

 


நானாட்டானில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு அலைவரிசை  தொடர்பில் பிரதேசவாசிகள் கோரிக்கை நொன்றினை விடுத்துள்ளனர்.


எமது நானாட்டான் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கட்டை காட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ,கீழே படத்தில் உள்ள அலைவரிசை கோபுரமானது எமது பிரதேச சபையில் ஒரு விளக்குத்தூண் உரிய அனுமதி மட்டுமே குறித்த நிறுவனத்தால் பெறப்பட்டது . ஆனால் இந்த பயணத் தடை காலம் வரை இதில் எந்தவிதமான தொலைத்தொடர்பு அலைவரிசை களுக்குரிய கருவிகள் பொருத்தப்படாது இருந்தது .


ஆனால் தற்போது இந்த பயணத் தடை காரணமாக பொதுமக்களின் பயணங்கள், போக்குவரத்துக்கள் குறைவாக உள்ள இந்த காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட இந்த கோபுரத்தில் தொலைத்தொடர்பு களுக்கு உரிய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது . இதற்குரிய அனுமதி பிரதேச சபையிடம் பெறப்படவில்லை. அதேவேளை இது 5G அலைவரிசையா..? அல்லது அதற்கு குறைவான அலைவரிசை என்பது போதிய விளக்கம் இன்றி இருக்கின்றது.


அத்துடன் எந்தவிதமான அலைவரிசைகள் கருவிகளும் பொருத்துவதற்கு அனுமதி பெறப்படாத நிலையில் இந்த ஒரு பயணத் தடை காலத்தில் பொது மக்களின் போக்குவரத்து இல்லாத நேரத்தில் மறைமுகமாக பொருத்தப்பட்டுள்ள இந்த கருவிகள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது ..மேலும் இதே போன்றதொரு அலைவரிசை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டு இருந்து ,அது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போதும் இருக்கின்றது.


எனவே இப்படியான நேரத்தில் இந்த ஒரு கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவிகள் ஆனது எமது மக்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது எனவே பொதுமக்கள் இந்த அலைவரிசை கோபுரம் தொடர்பாக அவதானமாக இருக்கும்படியும் இது சம்பந்தமாக குறித்த நிறுவனம் பொதுமக்களுக்கு போதிய விளக்கத்தினை வழங்க வேண்டும் என்றும் அல்லது இந்த கோபுரம் அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள காணி உரிமையாளர் இதற்குரிய சரியான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.


இது 4G அலைவரிசை கூறிய கோபுரம் என்று கூறப்பட்டாலும் இதுவரையில் மிக உயரமாக அமைக்கப்பட்ட கோபுரங்களில் தான்4G அலைவரிசை வழங்கப்பட்டுள்ளது .இது மிகவும் உயரம் குறைவான இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த 4G அலை வரி சையானது மிகவும் குறைவான உயரத்தில் இருப்பதனால் இது எந்த விதத்திலும் மக்களுக்கு அபாயத்தை தோற்றுவிக்கக் கூடிய ஒரு கருவியாகவே தென்படுகின்றது. எனவே குறித்த நிறுவனமோ ,அல்லது இந்த கோபுரம் அமைப்பதற்கு காணி வழங்கிய உரிமையாளர்களோ இதற்குரிய சரியான விளக்கத்தை வழங்க வேண்டுமென பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.