சுகாதார தரப்பு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

 


சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அல்லது வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள் தாமதிக்காது செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


மாறாக அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் மீட்பு குழுவினர் வரும் காத்திருந்து அவர்களால் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது சிறிய இடங்களில் பெருமளவானோர் ஒன்று கூடக்கூடிய வாய்ப்புள்ளது. 


இதன் போது கொவிட் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவே அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளவர்கள் கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


நாட்டில் கடந்த இரு தினங்களாக மூவாயிரத்திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 


இன்று வெள்ளிக்கிழமை 3,398 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. அதற்கமைய இதுவரையில் நாட்டில் ஒரு இலட்சத்து 99,242 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 101 269 தொற்றாளர்கள் புத்தாண்டு கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர்.


இன்று தொற்றுக்குள்ளான 1884 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரையில் ஒரு இலட்சத்து 62 397 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 


34 574 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 56 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4553 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 42 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இவற்றில் 3 மரணங்கள் நேற்று பதிவாகியவையாகும். ஏனைய 39 மரணங்கள் மே மாதம் 11 ஆம் திகதி முதல் இம்மாதம் 2 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.


இவ்வாறு கொவிட் தொற்றாளர் உயிரிழந்தவர்களில் டிக்கோயா, மன்னார், கடவத்தை, கொழும்பு, வத்தளை, பொலன்னறுவை, பஸ்யாகல, வேயங்கொட, ஹேனகம, மாத்தறை, அம்புத்தளை, பண்டாரவளை, கட்டுகஸ்தோட்டை, கிரிதலை, படல்கும்புர, காத்தான்குடி, களனி, பட்டுகொட, வத்தேகம, காத்தான்குடி 6, அரநாயக்க, கொச்சிக்கடை, நாரஹேன்பிட்ட, கம்பளை, ஹல்ஓலுவ, நீர்கொழும்பு, அக்கரப்பத்தனை, கிண்ணியா, கொட்டகலை, பொகவந்தலாவை, ஹின்தகல, கலஹெட்டிஹேன, ரத்தொலுகம, கண்டி, பெப்பிலிவல மற்றும் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 ஆண்களும் , 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 8 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.