170,022 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்பு!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சீரற்ற வானிலை காரணமாக 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 07 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 579 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை