யாழில் கறுப்பு யூலை இனஅழிப்பின் 38வது வருட நினைவேந்தல் போராட்டம்!📷

 

கறுப்பு யூலை இனஅழிப்பின் 38வது வருட நினைவேந்தல்- தமிழர் தாயகப்பபுதிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். 

கறுப்பு யூலை இனஅழிப்பின் 38வது வருட நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் தாயகப்பபுதிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், வவுனியா, கல்முனை ஆகிய தமிழர் தாயகப் பகுதிகளில் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டங்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வவுனியா போராட்டத்திலும் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கல்முனைப்போராட்டத்திலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன் , மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன், யாழ்மாவட்ட அமைப்பாளர் தீபன் ஆரோக்கியநாதர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்கள் , பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ”இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், கறுப்பு ஜீலை இனப்படுகொலை நாள், அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே உள்ளிட்ட வாசகங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.