இங்கிலாந்து வீரர் ராபின்சன் மீதான தடை விலக்கம்

 


இங்கிலாந்து வீரர் ஆய்லி ராபின்சன் நிறவெறி மற்றும் ஆணாதிக்க கருத்துகளை தெரிவித்ததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார்.

சமீபத்தில் நியுசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஆலி ராபின்சன். ஆல்ரவுண்டரான இவர் 7 விக்கெட்களையும் 42 ஓட்டங்களையும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் எடுத்து பிரபலமானார். அதே சமயம், அவர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நிறவெறி மற்றும் பெண்களுக்கு எதிரான சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்திருந்தவையும் பகிரப்பட்டு அவருக்குக் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து இப்போது அவரை தற்காலிகமாக சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை செய்தது.

ஆனால் ராபின்சன் அந்த கருத்தைப் பதிவிட்ட போது அவர் விவரமறியாத 18 வயது இளைஞனாக இருந்ததால், அவருக்கு குறைந்தபட்ச தண்டனைதான் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது அவருக்கு 3200 பவுன் அபராதம் விதிக்கப்பட்டு அவர் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.