போராட்டக்காரர்கள் கைது - பொங்கியெழும் ரணில்!

 


" அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களை, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஒடுக்குவதற்கும், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதற்கும் அதிகாரம் இல்லை. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை அடக்குவதற்கு பதிலாக பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகின்றது. இதனை விடுத்து அடக்குமுறைகளையும் கைதுகளையும் கட்டவிழ்த்து விடுவது என்பது ஏற்புடையதல்ல. இதனை அனுமதிக்கவும் இயலாது. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோஷலிச கட்சி என்பன முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளமை சட்டத்திற்கு முரணானதாகும். தனிமைப்படுத்தல் சட்டத்திற்குள் இவ்வாறான கைதுகளை முன்னெடுக்க இயலாது. எனவே பாதிக்கப்படுகிறவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் அடுத்த வாரத்தில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது." - என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.