சிறுவன் பேருந்து விபத்தில் படுகாயம்!

 


தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒரு தொகுதியினை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறக்கி விடுவதற்காகச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்வார்களை ஏற்றிச் சென்ற பேருந்து உண்ணாப்பிலவு பகுதியில், மிதிவண்டியில் பயணித்த சிறுவன் மோதியதில் ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த 15 வயதுடைய சிறுவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு வீதிப்போக்குவரத்து பொலிஸாரால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.