பாரவூர்தி குடை சாய்ந்ததில் வவுனியாவில் விபத்து!!
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வாகனத்தின் சாரதி படுகாயங்களிற்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் மஸ்கலியா பகுதியை சேர்ந்த பிரவீன் வயது 21 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்துதொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை