பாதாள குழு உறுப்பினரின் சகா கைது!!

 


பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான சமிந்த புத்திகவின் உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

'சாமீ' என்று அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர் 5 கிராம் ஹெரோயினுடன் அத்துருகிரிய, ஹபரகடா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜூன் 29 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் நபரொருவரை கொடாரியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் வேனில் வந்த மூன்று நபர்களால் நடத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய நபர்களை கைது செய்ய மேல் மாகாண தெற்கு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் சந்தேக நபர் இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.