பாரதி கண்ணம்மாவின் திடீர் திருப்பம்!!

 


பாரதி ஹேமாவிடம் கண்ணம்மா தான் உனது அம்மா என்று கூற அதைப் பார்த்து சௌந்தர்யா மிகவும் அதிர்ச்சி அடைகிறார். இந்த திடீர் ட்விஸ்ட்டால் பாரதி கண்ணம்மா புரோமோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பாரதி கண்ணம்மாவை ஏற்கும் விதமாக புரோமோ வெளியாகி இருப்பது திடீர் ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.

மலையாள தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கருத்தமுத்து என்ற சீரியல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தமிழில் பாரதி கண்ணம்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதியை ஓரளவு படித்த நல்ல குணமுடைய கண்ணம்மா திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், பாரதியின் தோழி வெண்பாவின் சதியால் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். கண்ணம்மா நிறைமாத கர்ப்பினியாக இருந்தபோது அவள் மீது சந்தேகப்பட்டு பாரதி அவளை வீட்டை விட்டு விரட்டுகிறான். கண்ணம்மா எங்கே செல்வது என்று தெரியாமல் திக்கு திரியாமல் நடக்கிறாள். அதுவரை சுமாராகப் போய்க்கொண்டிருந்த இந்த சீரியல் ரசிகர்கள் பலரும் மீம்களை பதிவிட ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்புடன் பாரடி கண்ணம்மா சீர்யல் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக வந்தது.

கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது. அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கு தெரியாமல் அவளுடைய மாமியார் சௌந்தர்யா எடுத்துச் சென்று ஹேமா என பெயர் வைத்து வளர்க்கிறார். பாரதியும் அது தனது குழந்தை என்று தெரியாமல் மகளாக நினைத்து ஒரு தந்தையாகப் பாசம் காட்டுகிறான். அதே நேரத்தில், கண்ணம்மா தனக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது தெரியாமல் ஒரு பெண் குழந்தைதான் பிறந்தது என்று அவளுக்கு லட்சுமி என்று பெயர் வைத்து வளர்க்கிறாள். 8 ஆண்டுகள் கடந்து விடுகிறது.

ஹேமாவும் லட்சுமியும் ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். தோழிகளாக பழகுகிறார்கள். அங்கே சமையல் வேலை செய்யும் கண்ணம்மாவிடம் ஹேமா சமையல் அம்மா என்று அன்பாக இருக்கிறாள். கண்ணம்மாவும் பாசம் காட்டுகிறாள். இது பாரதியின் வீட்டில் எல்லோரும் தெரிந்தாலும் பாரதிக்கு தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் தனது மகள் ஹேமா சமையல் அம்மா என்று பழகுவது கண்ணமாதான் என்பது தெரியவருகிறது.

இந்த சூழலில்தான், வில்லி வெண்பாவின் சதியால் ஹேமா கடத்தப்படுகிறாள். ஆனால், பாரதி ஹேமாவைக் கடத்தியது கண்ணம்மாதான் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறான். போலீஸ் கைது செய்கிறது. ஆனால், தனது மாமியார் மூலம் ஜாமீனில் வெளியே வரும் கண்ணம்மா, ஹேமாவை ரவுடிகளிடம் இருந்து போராடி மீட்கிறாள். ஹேமாவை மீட்டது கண்ணம்மாதான் என்பதைத் தெரிந்துகொண்ட பாரதி வீடு தேடி சென்று கண்ணம்மாவுக்கு நன்றி சொல்கிறான். கண்ணம்மாவும் முந்திரி கேசரி செய்து கொடுத்து உபசரிக்கிறாள். இந்த இடத்தில் பாரதியும் கண்ணம்மாவும் தங்களுடைய பழைய சந்தோஷமான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார்கள். இப்படி கடந்த எபிசோடுகள் விறுவிறுப்பும் அப்பா மகள் பாசம் கணவன் மனைவி நினைவுகள் என நெகிழ்ச்சியாக அமைந்தது. இதனால், பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் ஒன்று சேர்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.