38இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிப்பு!!

 


ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 38இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 38இலட்சத்து எட்டாயிரத்து 960பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில் இதுவரை 80ஆயிரத்து 875பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஒன்பதாயிரத்து 227பேர் பாதிக்கப்பட்டதோடு 46பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 361பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 601பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 35இலட்சத்து 99ஆயிரத்து 724பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.