குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

 


நோர்வூட்டில் பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வென்ஞர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய திருக்கேதீஸ்வரன் ( சங்கர்) என்பரவே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூத்திலுள்ள பலாமரமொன்றில் குறித்த நபர் தொங்குவதை கண்ட அயல் வீட்டார் வழங்கிய தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த நபர் அதிகாலை மூன்று மணியளவில் மாடு பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரின் சட்டை பையில் கடிதம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடித்தில், எனது மரணத்தை நானாகவே தேடிக்கொண்டேன்.

எனது குடும்பத்தினரை யாரும் துன்புறுத்த வேண்டாம் எனது சுய சிந்தனையிலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன் என இருந்ததாகவும், கடன் சுமையே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மரண விசாரணை அதிகாரி தனலக்ஷ்மி தலைமையில் இடம்பெறவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.