சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அப்டேட்!!

 


சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தின் பிரியங்கா மோகன், வினய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தில் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளது. அதில் டாக்டர் படத்தின் அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனவும், அனைவரும் சிரிக்க தயாராகுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.