மகத்தான சாதனை படைத்த கிழக்கு பல்கலைக்கழகம்!

 


இணைய வழியாக இன்று (20) இடம்பெற்ற மருத்துவ பீடங்களுக்கான அகில இலங்கை வினாவிடை போட்டியில் கிழக்கு பல்கலைக்கழகம் இறுதி சுற்றில் கொழும்பு மருத்துவ பீடத்தை எதிர் கொண்டு 10க்கு 0 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிவாகை சூடியது , தகுதிகாண் சுற்றில் இரு பீடங்களும் சம புள்ளிகளை பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது.


இப்போட்டியானது முதற்தடவையாக இலங்கை நரம்பியல் சங்கத்தால் நடாத்தப்பட்டதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. இது zoom வழி போட்டியாக இடம்பெற்றது.

இப்போட்டிக்கு மாணவர்களை Dr.அஜினி அரசலிங்கம், Dr.மயூரன் , Dr.றோஷினி ஆகியோர் தயார்படுத்தியதுடன்  பீடமும் பீடாதிபதியும் நிர்வாக ரீதியாக சகல ஆதரவையும் வழங்கி இருந்தது.இப்போட்டியில் சி.லலின்ஷன் ஆர்.அபினயா பாத்திமா லூதா ஏ.எம்.அகீல் டி.தனுஷ்காந்த் பி.தயானி ஆகியோர் பங்குபற்றி இப் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்திருந்தனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.