ஜீவா தங்கவேலுக்கு ஜோடியாகிறார் ஸ்ரித்தா ஷிவதாஸ்!

 


கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய மெகா சீரியலில் ஜீவா தங்கவேலுவும், ஸ்ரித்தா ஷிவதாசும் இணைந்து நடிக்கிறார்கள். இருவருமே இந்த தகவலை தங்களின் சமூகவலைதள கணக்குகளில் உற்சாகத்தோடு பகிர்ந்துள்ளனர்.

சமீபத்தில் புதிய சீரியல்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ், சமீபத்தில் தனது மற்றொரு புதிய சீரியலான எங்க வீட்டு மீனாட்சி பற்றிய செய்தியை வெளியிட்டது. இதனை அடுத்து, இந்த சீரியலில் ஜீவா தங்கவேலு, ஸ்ரித்தா ஷிவதாஸ், நீபா, பாவா லக்ஷமணன் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

தற்போது, கலர்ஸ் தமிழ் எங்க வீட்டு மீனாட்சி சீரியலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவின் படி, ஜீவா தங்கவேல், கதையின் நாயகனாக சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில், ஒரு வெட்டிங் பிளானராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரித்தா, கதையின் நாயகி மீனாட்சியாக, லெக்சரராக நடிக்கிறார்.

கல்லூரிப்படிப்பு முடிக்காத சிதம்பரம், எப்படியாவது பட்டப்படிப்பு சேர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் போது, அவருடைய வகுப்பில் லெக்சரராக மீனாட்சி அறிமுகமாகிறார். இதைத் தொடர்ந்து, என்ன நடக்கிறது என்று கதையோட்டம் செல்கிறது. இந்த வீடியோ ப்ரோமோவை, எங்க வீட்டு மீனாட்சி நாயகன் ஜீவா தங்கவேலு மற்றும் நாயகி ஸ்ரித்தா ஷிவதாஸ் இருவருமே பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.

ஜீவா மற்றும் ஸ்ரித்தா இருவருக்குமே தொடர்ந்து வாழ்த்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஜீவா தங்கவேல் சின்னத்திரைக்கு புதியவரல்ல. இவர் பல திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு முன்னரே, விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்றவர் ஜீவா. லொள்ளு சபா, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஜீவா கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தார். பிறகு சில திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலின் வழியே மீண்டும் சின்னத்திரையில் தோன்றுகிறார். கூடுதலாக, இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமான நடிகருடன் இணையும் ஸ்ரித்தா, முதல் முறையாக எங்க வீட்டு மகாலட்சுமியாக சின்னத்திரையில் அடி எடுத்து வைக்கிறார். சின்னத்திரைக்கு புதிய முகமாக இருக்கும் ஸ்ரித்தா ஷிவதாஸ், சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News

 Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colomb

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.