ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை!

 


பளுத்தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ளார் மீராபாய் சானு.

இந்நிலையில் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் பதக்கம் வென்ற 2வது வீரான்ஙனையானார் மீராபாய் சானு. சானு 87 கிலோ, 84 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கினார். ஆனால் 89 கிலோ எடையை தூக்க முடியவில்லை.

இதனையடுத்து வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சீனாவின் ஹூ ஷிஹு 94 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். இது ஒலிம்பிக் வரலாற்றுச் சாதனையாகும். இந்தோனேசியாவுக்கு வெண்கலம். 87 கிலோ எடைத் தூக்கி மீராபாய் சானு தன் சொந்த சாதனையையே சமன் செய்தார்.

2017-ல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற போது இதே 87 கிலோதான் தூக்கினார். மொத்தம் 202 கிலோ தூக்கினார் மீராபாய் சானு. மொத்தமாக சீன வீராங்கனை ஹூ ஷிஹூ 210 கிலோ தூக்கி தங்கம் வென்றார்.

இதேவேளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ரியோவில் மீராபாய் சானு கடும் ஏமாற்றமளித்தார், ஆனால் அதன் பிறகு கடுமையாக உழைத்து நாட்டுக்காக இப்போது ஒலிம்பிக் வெள்ளி வென்று வரலாறு படைத்துள்ளார்.

2021 ஆசிய வெய்ட்லிப்டிங்கில் 119 கிலோ எடைத்தூக்கினார் மீராபாய். இது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

இது கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவின் தங்கப் பதக்கம் ஆகும். இந்த நிலையில் இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colomb

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.