சங்கர் படத்தில் இணையும் விஜய், அஜித், ரஜினி பட வில்லன்!!

 


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார்.

ராம்சரண் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் ராம்சரணுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ரங்கஸ்தலம்’ படத்தில் இணைந்து நடித்திருந்த ஜெகபதி பாபுவும், ராம்சரணும், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.

நடிகர் ஜெகபதி பாபு, விஜய்யுடன் பைரவா, அஜித்துடன் விஸ்வாசம் , தற்போது ரஜினியுடன் அண்ணாத்த என மூவருடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.