இந்தியாவில் கொரோனாவிற்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!!

 


கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்தொன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி வலியில்லாமல் செலுத்தக் கூடிய வகையிலான தடுப்பு மருந்தொன்று அகமதாபாத்தை தலைமையகமாகக் கொண்ட சைடஸ் கெடிலா (Zydus Cadila) என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அறிந்துகொள்ள, 28, 000 பேரை உள்ளடக்கிய மூன்று கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 1,000 பேர் 12 – 18 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவசர கால பயன்பாட்டிற்காக ZyCov-D எனப்படும் குறித்த தடுப்பு மருந்துக்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும் என சைடஸ் கெடிலா நிறுவனம், மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ளது. இந்திய மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத் துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மருந்து 28 நாள்கள் இடைவெளியில் மூன்று டோஸாக வழங்கப்படும் எனவும் தற்போது செலுத்தப்படும் ஊசிக்குப் பதிலாக, ஸ்பிரிங் மூலம் இயங்கும் ஒரு கருவியைக் கொண்டு இந்தத் தடுப்பு மருந்து நேரடியாக செலுத்தப்படும். இதனால் ஊசி போடுவது போன்ற வலி ஏற்படாது என தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது இந்தத் தடுப்பு மருந்தை செலுத்திக்கொண்டவர்களில் 67% பேருக்கு தொற்றுறுதியாகவில்லை எனவும் தெரியவந்துள்ளது .

இதேவேளை டெல்டா வைரஸ் வீரியம் அடைந்துள்ள காலத்தில் இந்த தடுப்பு மருந்து பரிசோதனை செய்யப்பட்டதால் டெல்டா வகை வைரஸுக்கு எதிராகவும் செயல்படும் திறனை கொண்டுள்ளதாக சைடஸ் கெடிலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.