மகாவிஷ்ணுவின் பதினாறு பெயர்கள்!!


மனிதன் செயல்பாடுகள் ஒவ்வொன்றின் போதும், மகாவிஷ்ணுவிற்கு ஒவ்வொரு பெயர் இருக்கிறது. அந்தப் பதினாறு பெயர்களைத் தெரிந்து கொள்ளலாமா?

1. மருந்தை உட்கொள்ளும் பொழுது அவனை அழைத்தால் – விஷ்ணு

2. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் – ஜனார்த்தனன்

3. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் – பத்மநாபன்.

4. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் – பிரஜாபதி.

5. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் – சத்ரதாரி.

6. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் – திரிவிக்ரமன்.

7. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீ தரன்.

8. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் – கோவிந்தன்.

9. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் – மதுசூதனன்.

10. காடுகளில் செல்லும் பொழுது அவனைத் துணைக்கு அழைத்தால் - நரசிம்மன்

11. நெருப்பால் துன்பம் வரும் பொழுது அவனை நினைத்தால் - ஸ்ரீ மகாவிஷ்ணு

12. தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் - ஸ்ரீ வராகன்

13. ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவனை நினைத்தால் - ஸ்ரீ ராமன்

14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் - வாமனன்

15. இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்

16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.