அனுஷ பெல்பிடவுக்கு பிரதமர் மஹிந்த வழங்கிய புதிய பதவி!

 


பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் இன்று அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது.

ஒன்றினைந்த சேவை உதவி பணிப்பாளர், ஜனாதிபதியின் உதவி செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் கணக்காளர், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், அரச தகவல் திணைக்களத்தின் முதலாவது பணிப்பாளர் நாயகம், மற்றும் இலங்கை ஒளிப்பரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை தாபனம் ஆகியவற்றின் தலைவர், கைத்தொழில் அமைச்சின் செயலாளர், என பலதரப்பட்ட பதவிகளை வகித்துள்ளார்.

34 வருட கால அரச சேவை அனுபமுடையவர். கடந்த மாதம் 22 ஆம் திகதி அரச சேவையில் இருந்து ஓய்வுப் பெற்ற இவரை அரசியலமைப்பின் 52(1) உபபிரிவின் அதிகாரங்களுக்க அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொருளாதர கொள்கைகள் மற்றும் திட்டச் செய்ற்படுத்துகை அமைச்சின்செயலாளராக நியமிக்க ஆலோசனை வழங்கினார். இதற்கமையவே பிரமரினால் அமைச்சின் செயலாளர் நியமனம் வழங்க்ப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.