24 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன மகனைகண்டுபிடித்த தந்தை!

 


24 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தனது மகனை தந்தஒயொருவர் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த குவோ காங்டாங், சாண்டோங் மாகாணத்தில் வசித்து வந்தார்.

அவருக்கு 2 வயதில் குவோ சின்ஜென் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில், 24 வருடங்களுக்கு முன்பு 1997 ஆம் ஆண்டு சின்ஜென், காணாமல் போய் உள்ளார். இதனையடுத்து பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. பொலிஸில் புகார் அளித்தும் பலனில்லை என்ற நிலையில், குழந்தையை தானகவே தேட முடிவு செய்த தந்தை சீனா முழுவதும் தனது பயணத்தை தொடங்கினார் காங்டாங். ஒரு ஆண்டு, இரு ஆண்டு அல்ல சுமார் 24 ஆண்டுகளாக மகனை தேடி வந்துள்ளார்.

இதற்காக இவர் 500,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்துள்ளார். அவரின் தேடல் பலனாக தந்தையின் மகன் கிடைத்துள்ளான். டிஎன்ஏ முறையில் பரிசோதனையில் இது ஊர்ஜிதமானது. 24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல்காரர்களால் மூலம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இவரின் தேடலை மையமாக வைத்து, (மகன் கிடைப்பதற்கு முன்பாகவே) ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஆண்டி லாவ் நடித்த 2015 திரைப்படமான லாஸ்ட் அண்ட் லவ் படத்திற்கு உத்வேகம் அளித்தது. 51 வயதான குவோ காங்டாங், கடந்த 24 ஆண்டுகளாக சீனாவைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பயணம் செய்துள்ளார்.

இதன் போது மிக பயங்கரமான விபத்தில் சிக்கி எழும்புகள் உடைந்ததுள்ளது. இதன்போது , நெடுஞ்சாலை கொள்ளையர்களை கூட சந்தித்தாக கூறியுள்ளார். தனது பைக்கில், மகனின் படத்தை பின்னால் வைத்து கொண்டே இவர் பயணம் செய்துள்ளார்.

மேலும், பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்த்வற்காக பெரும்பாலும், பாலங்களுக்கு அடியில் தூங்கியதாகவும் கூறினார். இதனிடையே, கடத்தப்பட்ட ஏழு குழந்தைகளையும் அவர்களின், பெற்றோர்களிடம் சேர்க்க உதவி புரிந்துள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.