மகளைக் காணவில்லை என வவுனியாவில் தாயார் முறைப்பாடு!!

 


வவுனியாவில் இளம் குடும்ப பெண்ணொருவரை காணவில்லையென அவரது தாயாரினால் பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கொக்குவெளி- மகாறம்பைக்குளம் அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என்பவரேயே காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்கு சென்று முட்டை வேண்டி வருவதாக கூறிவிட்டு குறித்த பெண் வெளியேறி சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற பெண் பலமணிநேரங்கள் தாமதமாகியும் வீடு திரும்பாதமையினால், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். ஆனாலும் அங்கும் அவர் செல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் நேற்று (திங்கட்கிழமை) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்கள்.

குறித்த பெண், கணவரை பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றால் வவுனியா பொலிஸாருக்கோ அல்லது  மேற்கண்ட  0765462984 என்ற தாெலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் கோரியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.