கிளிநொச்சி - பளை இலங்கை வங்கி கிளைக்கு சென்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பளை நகரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே , குறித்த வங்கிக்கு சென்றுவந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் மேலும் ஒருவருக்கு 2ம் தடவை பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் திகதி தொடக்கம் 20ம் திகதிவரை வங்கியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்தி உதவுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை