கணவனின் உடலைச் சுமந்து சென்ற பிரபல நடிகை!

 


மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து கணவர் ராஜ் கௌஷிக் மீது கொண்ட அதீத காதலால் நடிகை மந்திரா பேடி கணவனின் உடலை சுமந்து சென்றமை பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

விஜே, மாடல், டிவி நடிகை, சினிமா நட்சத்திரம் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை மந்திரா பேடி. இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ராஜ் கௌஷிக் உயிரிழந்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்களான குஷ்பு, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பலரும் நடிகை மந்திரா பேடிக்கு ஆறுதல் கூறியதுடன் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்கள் ராஜ் கௌஷிக் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். பெண்கள் பொதுவாகவே இறுதி ஊர்வலத்தில் கணவரின் உடலை சுமக்க மாட்டார்கள்.

ஆனால், காதல் கணவர் ராஜ் கெளஷலின் மறைவால் மிகவும் மனம் வாடிய நடிகை மந்திரா பேடி மூடநம்பிக்கைகளை ஒதுக்கி வைத்து கணவரின் உடலை முன் நின்று தூக்கிச் சுமந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை மந்திரா பேடி இயல்பிலேயே உடை, தோற்றம், செயல் என எல்லாவற்றிலுமே தைரியமும் துணிச்சலும் காணப்படும். மேலும், அவரது குழந்தைகள் இருவரும் சிறுவர்கள் என்பதால் தனது கணவர் ராஜ் கௌஷிக் உடலை உறவினர்களுடன் இணைந்து தானே முன் நின்று தூக்கிச் சென்ற  நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வரைலாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.