அர்ச்சுணனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!!


சுவேதன் என்ற மகாராஜா சில கோரிக்கைகளுக்காக நூறு ஆண்டுகள் ஒரு யாகம் செய்தான். யாகத்தீயில் நெய் விடப்பட்டது. தீக்கடவுளாகிய அக்னிதேவன் அதைக் குடித்துக்குடித்து மந்தகதியாகி விட்டான். மந்தநோய் தீர வேண்டுமானால், தனது ஆக்ரோஷத்தை (வெப்பத்தை) யார் மீதாவது காட்ட வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது.


அவன் ஒரு அந்தணன் போல் வேடமிட்டு, அர்ச்சுணனிடம் வந்தான், "அர்ச்சுனா! எனக்குப் பசிக்கிறது. உணவு தாயேன்'' என்றான். அவன் நெருப்புக்கடவுள் என்பதை அறியாத அர்ச்சுணனும் உணவளிப்பதாக வாக்கு கொடுத்து விட்டான்.

"எனக்குரிய உணவு காண்டவவனத்தில் இருக்கிறது'' என அந்தணர் கூறவே, அந்த வனத்தைக் கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

உடனே அக்னிதேவன் தன்னிடமிருந்த பிரம்ம தனுசுவாகிய காண்டீபத்தையும் (பிரம்மனால் வழங்கப்பட்ட வில்), வெள்ளைக் குதிரைகள் பூட்டிய அழியாத தேர் ஒன்றையும் கொடுத்தான்.

கண்ணபிரான் தேர் செலுத்த, அர்ச்சுணனன் அதில் ஏறிச்சென்றான்.

இந்திரனுக்குச் சொந்தமானது அந்த வனம். அதைக் காக்க அர்ச்சுணனனுடன் இந்திரன் போராடினான். ஆனால், அவனை வென்ற அர்ச்சுணன் அந்தக் காட்டில் இருந்த அரக்கர்களையும் கொன்றான். பின்னர், அந்தணர் வேடத்தில் இருந்த அக்னிதேவன் காண்டவ வனத்திற்குள் நுழைந்தான். தீப்பற்றி எரிந்தது. அந்தக் காட்டைத் தனக்கு உணவாக்கிக் கொண்டான் அக்னி.

இப்படித்தான் அர்ஜுனனுக்குப் பெயர் சொல்லும்படியான "காண்டீபம்” எனும் ஆயுதம் கிடைத்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.