பாடகி தீ இன் பின்புலம் யாழ்ப்பாணமா!!

 


பட்டி தொட்டி எங்கும் முணுமுணுக்கும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடலை பாடிய தீ பற்றிய சுவாரஷ்யமான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாடகி தீ இன் தந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். தீ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டு தமிழ் பின்னணிப் பாடகி முழு பெயர் தீட்சிதா.

தீட்சிதா 1998 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் இலங்கைத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவரது தாயார் மீனாட்சி ஐயர் சந்தோஷ் நாராயணனை மறுமணம் செய்து கொண்டார்.

இவர் தனது கல்வியின் இடைவேளையின் போது சந்தோஷ் நாராயணன் ஆல்பங்களான பீட்சா II: வில்லா (2013) மற்றும் குக்கூ (2014) ஆகிய திரைப்படங்களில் இரண்டு பாடல்களைப் பாடி தன்னை ஒரு பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.

சிறிய இடைவேளைக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நான் நீ என்ற பாடலை பாடகி சக்திஸ்ரீ கோபாலன் உடன் இணைத்து பாடியுள்ளார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த பாடலுக்காக சிறந்த பாடகிக்கான பிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருதுகள் போன்ற விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

2016 இல் இறுதிச்சுற்று திரைப்படத்தில் என் சண்டைக்காரா மற்றும் உசுரு நாரம்பேலி போன்ற பாடல்கள் பாடியுள்ளார். அதை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்த திரைப்படங்களான இறைவி (2016), குரு (2017), மேயாத மான் (2017), காலா (2018), வட சென்னை (2018), போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

2017ஆம் ஆண்டில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் தெலுங்கு மொழி மறுதயாரிப்பான குரு என்ற திரைப்படத்திலும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இதுவே இவரின் முதல் தெலுங்கு பாடலாகும். அதை தொடர்ந்து 2018 இல் நடித்த காலா என்ற திரைப்படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா' என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் மிகவும் பிரபலாமானது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த மாரி 2 திரைப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடலை நடிகர் தனுஷால் எழுதப்பட்டு மற்றும் அவருடன் இணைத்து பாடியுள்ளார்.

இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானது மற்றும் யூடியூப்பில் அதிகஅளவு மக்களால் பார்க்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

அதை தொடர்ந்து 2019 இல் மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் 'வானில் இருள்' என்ற பாடலை பாடியுளளார். மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் சூரரைப் போற்று என்ற படத்திலும் பாடல் ஒன்று பாடியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.