கைதான நடிகை பிணையில் விடுவிப்பு!!

 


இளைஞர் ஒருவரை மோதித்தள்ளிய குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபேக்ஷா ஸ்வர்ணமாலி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் எதிர்காலத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கட்டுகஸ்தோட்டை பொலிசார் தெரிவித்தனர். நுகவெல பிரதேச செயலகம் அருகே இடம்பெற்ற விபத்து தொடர்பாக உபேக்ஷா ஸ்வர்ணமாலி கைது செய்யப்பட்டார்.

அவர் ஓட்டி வந்த கார் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 18 வயது இளைஞர் பெரதெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.