இரு அரச அமைச்சர்கள் இடையே கடும் பனிப்போர்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சினை தொழிலமைச்சின் விடயதானங்களிலிருந்து நீக்கி வெளிவிவகார அமைச்சுடன் இணைத்துக் கொள்ளும்படி அதன் இராஜாங்க அமைச்சரான பிரியங்கர ஜயரத்ன அரச உயர்மட்டத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்கர ஜயரத்னவின் இராஜாங்க அமைச்சு தொழில் அமைச்சுக்கு கீழ் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொழில் அமைச்சின் உயரதிகாரிக்கும், இராஜாங்க அமைச்சுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்தே அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் தொழிலமைச்சுக்குக் கீழ் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சினை மீளப்பெற்று வெளிநாட்டு விவகார அமைச்சுடன் இணைக்கும்படி இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை