புதிய துணைவேந்தர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!!

 


வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்த நிலையில் பல்கலைகழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நேற்றையதினம் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் இன்றையதினம் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

முன்னதாக சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் மதகுருமார்களிடம் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

இதன்போது, நியமனத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நீண்டகால சவால்களுக்கு மத்தியில் பல்கலைகழகம் என்ற இலக்கை நாம் அடைந்துள்ளோம். இதற்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள், ஊடகத்துறையினர் என அனைவரும் பங்காற்றியுள்ளனர். இதனை மேலும் விருத்தி செய்வதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியமானது. மூன்று வருடங்களிற்கு குறித்த பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியில் இந்த பிரதேசத்தின் நாட்டின் அபிவிருத்தியில் நாம் பாரிய பங்களிப்பினை வழங்குவோம். எதிர்வரும் 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எமது பல்கலைகழக செயற்பாடுகள் ஆரம்பமாகும் என துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.