மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்!!
இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 4 முதல் 8ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சமாக அதிகரிக்கவுள்ளத.
இவற்றில் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 27 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கப்பெறும் ஆகக்கூடியளவான தடுப்பூசி தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை