குறுகிய ஆசை....!!
சின்னச் சின்ன மழைத் துளியில்
சிரித்து விளையாடும் மழலை போல சிரித்து மகிழ்ந்திட ஆசை....
ஆலமர விழுதினில் தொங்கி
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல அகமகிழ்ந்திட ஆசை....
அன்னை மடியினிலே அயர்ந்து
தூங்கும் சிசுவைப் போல்
அமைதியாய் உறங்கிட ஆசை....
அழகான கடற்கரையில் அங்கங்கே
மணல் கிண்டி மட்டி பொறுக்கி
மணல் வீடு கட்ட ஆசை...
கவலை இன்றி கண்ணீர் இன்றி
துயர் இன்றி வலி இன்றி
நீள் தூக்கம் கொள்ள ஆசை....
குழந்தையாய் மாறி மறுமுறையும் குதுகலமாய் ஒருமுறையேனும்
வாழ்ந்திட குறுகிய ஆசை....
🌹அருந்தமிழ்🌹
14/07/2021

.jpeg
)





கருத்துகள் இல்லை