அரச வங்கி ஒன்றில் அதிக பணம் மீள அளிப்பு - பெண்ணொருவரின் பெருந்தன்மை!!

 


தம்புளை பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றில் தவறுதலாக வாடிக்கையாளர் ஒருவருக்கு 13 லட்சம் ரூபாய் பணம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த பெண் மேலதிக பணத்தை மீளவும் வங்கியிடமே ஒப்படைத்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி தம்புளை நகரத்தில் அழகு கலை நிலையம் நடத்தும் அதன் உரிமையாளரான நிலூஷிக்கா ஜயவர்தன என்ற பெண்ணினால் இந்த நேர்மையான செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண் 7 லட்சம் ரூபாய் பணம் எடுத்து வந்துள்ளார். எனினும் வங்கி இயந்திரத்தால் எண்ணப்படுவதனால் அவர் அந்த பணத்தை எண்ணி பார்க்காமலேயே அழகு கலை நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தனது பணத்தை எண்ணிப் பார்க்கும் போது, 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணத்தாள் கட்டுகள் அதிகமாக இருப்பதனைக் கண்டார்.

எண்ணிப் பார்க்கும் போது 20 லட்சம் ரூபாய் காணப்பட்டுள்ளது. இதன் போதே வங்கி 13 லட்சம் ரூபாய் அதிகமாக வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வங்கிக்கு தெரியப்படுத்திய நிலையில், வங்கி அதிகாரிகள் குறித்த அழகு கலை நிலையத்திற்கு சென்று 13 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

யாரோ ஒருவருடைய தொழிலைப் பறித்த, அடுத்தவர்களின் பணத்தை பெறுவதில் மகிழ்ச்சி ஒன்றும் இருந்து விடப் போவதில்லை என அந்தப்பெண் வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் நேர்மையைப்பார்த்து அதிகாரிகள் அவரை பாராட்டி சென்றுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.