மற்றுமொருவருக்கு கொழும்பில் டெல்டா உறுதி!!

 


இந்தியாவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு – வெல்லம்பிட்டிய – கித்தம்பஹுவ பிரதேசத்தில் வைத்து குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

குறித்த நபர் பொறளை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஆண் நபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த நபர் தொழில்புரிகின்ற இடம் மற்றும் நெருக்கமாகப் பழகியவர்கள் என 20 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யபட உள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டதாக  தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை ஐந்து பேரே அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைப் பிரதிப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.