கொரோனா தொற்று- யாழ். வல்வெட்டித்துறையில் தொடரும் அபாயம்!!
கொரோனா அச்சம் காரணமாக யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு மேலும் 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 16 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.
வல்வெட்டித்துறை வடமேற்கு (J/388) கிராம அலுவலகர் பிரிவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை