பிரமாண்டமாக சாய்பாபா அலங்கரிக்கப்பட்டு கொரோனாவுக்காக வழிபாடு!!

 


இந்தியாவில் சாய்பாபாவுக்கு 3 இலட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சனிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டியும் இந்த வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது சாய்பாபாவுக்கு 3 இலட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சனிடைசர் போத்தல்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

கடந்த 4 தினங்களாக சாய்பாபாவுக்கு இந்த விசேட அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி இந்த சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.