இந்திய பழம்பெரும் நடிகை காலமானார்!!

 


பழம்பெரும் நடிகையான ஜெயந்தி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஜெயந்தி எதிர்நீச்சல், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளதோடு, மிஸ் லீலாவதி என்ற கன்னட படத்தில் சிறுவயது பெண்ணாக சிறப்பாக நடித்து தேசியவிருது பெற்றார்.

தனது சிறப்பான நடிப்புக்காக 7 முறை கர்நாடக அரசின் விருதுகளை வென்றுள்ள இவர், சினிமாவில் மிகவும் பிரசித்தி வாய்ந்தவர். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஜெயந்தி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.