புதினா இலையின் மருத்துவ பயன்கள்!!

 


புதினா நன்மைகள் 

புதினா ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு கீரையாகும். புதினாவானது பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்களால் உணவு பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதினாவானது ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரையாகும்.

புதினா கீரையில் நீர்ச்சத்துபுரதம்கொழுப்புகார்போஹைடிரேட்நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள்பொஸ்பரஸ்கல்சியம்இரும்புச்சத்துவிற்றமின் ஏநிக்கோட்டினிக் ஆசிட்ரிபோ மினேவின்தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.


புதினா மருத்துவ பயன்கள்

1. புதினா இரத்தத்தை சுத்தமாக்கும், வாய் துர்நாற்றத்தை நீங்கும், பசியை தூண்டும்.
2புதினா அசைவ மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.
3. புதினா மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
4. புதினாவை நீர் சேர்க்காமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால் தசைவலிநரம்புவலிதலைவலிகீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.
5. புதினாக் கீரையானது மஞ்சள் காமாலைவாதம்வறட்டு இருமல்சோகைநரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
6. முகப்பரு உள்ளவர்களும்வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
7. சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீர் போல தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.
8. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால்உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
9. புதினாக்கீரை துவையலை வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
10. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி வருவது இயல்பானது. அந்த நேரங்களில் புதினாக்கீரையை சாப்பிட்டால் கர்ப்பிணிகளின் அதிகப்படியான வாந்தி நிற்கும்.
11. மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள்புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் பிரச்சனை நீங்கும்.
12. புதினா சாறுபூண்டு சாறுஎலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்துசிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு தொல்லை இருக்காது.
13. உலர்ந்த புதினா கீரையை பொடி செய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும்.
14. ஆண்மைக் குறைவை நீக்குவதில் புதினாக் கீரை முக்கிய பங்கு வகிக்கின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.