சுகாதார பாதுகாப்பு முறையினை மீறி நடத்தப்பட்ட திருமணம்!

 


பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ ஆரியபுர கிரீன்லைன் மண்டபத்தில் சுகாதார முறையினை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்று இடைநிறுத்தப்பட்டதாக பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனா மற்றும் டெல்டா தொற்று காரனமாக திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார முறையினை மீறி இந்த திருமண நிகழ்வு பொகவந்தலாவ ஆரியபுர பகுதியில் மேற்கொள்ளபட்டதாகவும் குறித்த திருமண நிகழ்விற்கு 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழஙக்பட்ட தகவலுக்கமைய குறித்த திருமண மண்டபத்திற்கு விரைந்த பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் திருமண மண்டபத்தில் இருந்த ஏனைய மக்களை அங்கிருந்து வெளியேருமாறு அறிவுருத்தல் வழங்கபட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டோரை அங்கிருந்து வெளியேற்றிய பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் திருமண நிகழ்விற்கு மனமகள் மற்றும் மனமகன் பெற்றோர்கள் ஆகியோர் மாத்திரம் கலந்து கொள்ள முடியுமென பொது சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் எச்சரித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்களும் பொகவந்தலாவ பொலிஸாரும் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு மண்டபத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.