டெல்டா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகள் குறித்து சிறப்பு விசாரணை !
இலங்கையில் தற்போது விரைவாக பரவிவரும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகள் குறித்து அறிவதற்கு சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
டெல்டா
கொரோனா வைரஸ் மாறுபாட்டின் 3 பிறழ்வுகள், கொழும்பு மற்றும் ஏனைய
பிரதேசங்களுக்கு பரவியுள்ளதா என்பதை கண்டறியவே இந்த சிறப்பு விசாரணை
முன்னெடுக்கப்படவுள்ளது.
ஸ்ரீ
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும்
உயிரணு உயிரியல் பிரிவின் ஊடாக இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.
மேலும்,
இந்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை நிறைவுப்பெற்றப் பின்னர் அது
தொடர்பான அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேலா
குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை