மகிழ்வாக வாழ்ந்து உறவுகளால் உலகை நிறைப்போம்....!!

 


வாழ்க்கை என்றால்

பிரச்சினைகள் நிறைந்ததே..

பிரச்சினைகள் அற்ற வாழ்க்கையும் இல்லை. பிரச்சினைகள் ஏற்படாத உறவுகளும் இல்லை. உறவினர்களும் இல்லை. ஆனால் பிரச்சினை எதுவாக இருந்தாலும், சிறிது நேரம் சம்பந்தப்பட்டவர்கள்

உடன் ஆறுதலாக, அமர்ந்து ,மனம் விட்டு பேசினால் நிச்சயமாக பிரச்சினைகளை தீர்க்க முடியும்.. முற்றாக இல்லாவிடினும் சிறிதளவாவது பிரச்சனைகளை குறைக்க முடியும்.


இன்னும் தனிப்பட்ட அதாவது  குடும்ப (கணவன் மனைவி சம்பந்தப்பட்ட) பிரச்சினைகளுக்கு அடுத்தவரிடம் கருத்து கேட்பது, இல்லை அடுத்தவரிடம் கொண்டு போவதும் சில வேளைகளில் பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கி விடுகின்றது.


இந்த வாழ்க்கை இறைவன் எமக்கு அளித்த மிகப்பெரிய கொடை  ஆகும். வாழ்கின்ற குறுகிய காலத்தில் இயன்றவரை மற்றவரை அன்பு செய்து, பகிர்ந்து, விட்டுக்கொடுத்து வாழ்வோம்.


இன்று இருப்பவர் நாளை இருப்பதில்லை. நாளை இருப்பவர் நாளை மறுநாள் சிலவேளை இருப்பதில்லை. எனவே இருக்கும்போது அனைவரோடும் அன்பாக இருப்போம்.


பிரச்சினைகளை தொடர்புபட்டவர்கள் உடன் அமர்ந்து பேசி புரியவைத்து தெளிய வைப்போம். சிலர் உடனே புரிந்து கொள்வார்கள். பலர் உடனும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களோடு எமது நேரத்தை செலவழித்து புரிய வைப்போம். அதுவே சிறப்பானது. பிரச்சினைகள் மேலும் பெரிதாகாமல் உறவுகள் நிலைப்பதற்கு இதுவே உகந்த வழியுமாகும்....


பிரச்சினைகளால் பிரிந்த உறவுகளை விட பிரச்சினைகள் உருவாகிய காரணத்தை பேசாமல் இருப்பதால், உருவாகிய இடைவெளியினால் பிரிந்த உறவுகள் தான் ஏராளம்.


இன்றைய அவசர உலகில் ஆறுதலாக அமர்ந்து மனம் விட்டு பேசுவதற்கு நேரமின்மை என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆனாலும் எமது குடும்பம் உறவுகள் நிலைத்திருக்க வேண்டுமானால் அந்த நேரத்தை  நாம் நிச்சயம் ஏற்படுத்தியே ஆக வேண்டும்....


எனவே மனம் விட்டு உரையாடி, பிரச்சினைகளை களைந்து, மகிழ்வாக  வாழ்ந்து  உறவுகளால் உலகை நிறைப்போம்....


இவை எனது தனிப்பட்ட கருத்து....

சரியென்று உங்களுக்கு தோன்றினால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்....எனதருமை உறவுகளே....!


*அருந்தமிழ்*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.