யாழில் 24 வயது இளைஞன் கொடூரமாக வெட்டிக் கொலை!


 யாழ்ப்பாணம் - குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக நடைபெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநகரைச் சேர்ந்த ஜெரன் வயது -24 என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார்.

வன்முறைக் கும்பலின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வேறு இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நால்வர் வழிமறித்து சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் குருதி வெள்ளத்தில் கிடந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியது.

அவரே உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.