இராணுவ தொழில்நுட்ப சிந்தனையின் ஒரு மூலோபாய வடிவம்தான் கேணல் ராயூ!


பிரபாகரனியத்தின் இராணுவ தொழில்நுட்ப

மூலோபாய சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த பொன்னம்மான், வாசு, ஜொனி என்று நீளும் பெரும் பட்டியலில் கேணல் ராயூ இதன் கடைசி வித்து.


இந்த உலக ஒழுங்கை பலம்தான் தீர்மானிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே அந்த பலம் மிக்க உலக ஒழுங்குடன் சரி சமமாக நின்று பேரம் பேசும் வல்லமையை வகுத்துக் கொள்வதனூடாகத்தான் தேசிய இனங்கள் தமது உரிமைகளை பேண முடியும் என்பதில் நந்திக்கடல் தெளிவான சிந்தனையை கொண்டுள்ளது.


ஒரு கட்டத்தில் அதன் அடுத்த கட்டமாக அந்த உலக ஒழுங்கை நிர்மூலம் செய்யவும் அறைகூவல் விடுக்கிறது.


பெரும் இராணுவ தொழில் நுட்ப வளங்களுடன் குறிப்பாக அணு ஆயுத வலிமையுடன் பேணப்படும் உலக ஒழுங்கை எப்படி நிர்மூலம் செய்வது என்பதில் நந்திக்கடல் தெளிவான இராணுவ மூலோபாய சிந்தனையை வகுத்து போராடும் தேசிய இனங்கள் முன் வைக்கிறது.

அதன் ஒரு கட்டமாகவே உயிராயுதங்களை மறு அறிமுகம் செய்கிறது. தற்கொடை தாக்குதல்கள் என்பது முன்பே உலகளவில் அறிமுகமாகியிருந்தாலும் அதை யாரும் கோட்பாட்டுருவாக்கம் செய்யவில்லை.

அத்தோடு அத் தால்குதல்களின் நோக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, வழி முறைகள் குறித்து நிறைய கோளாறான தர்க்கங்கள் இருந்தன.


உலக பயங்கரவாத அரசுகளின் லொபிக்குள் அவர்களது தியாகம் உள்மடிந்து மடைமாறியதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.


தியாகங்கள், அர்ப்பணிப்புக்களை கோட்பாட்டுருவாக்கம் செய்வதனூடாகத்தான் அதை அர்த்தமுள்ளதாக்குவதுடன், அரச

பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை ஊடறுத்து விடுதலையை நோக்கி நகர முடியும் என்கிறது நந்திக்கடல்.


அரசு என்ற போர்வையில் பேரழிவு ஆயுதங்களுடன், அதி நவீன விஞ்ஞான- தொழில்நுட்ப புலனாய்வு வலையமைப்புக்களுடன், நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புசார் சிந்தனை குழாம்களின் லொபிகளால் சுற்றி வளைக்கப்பட்டு வேட்டையாடப்படும் தேசிய இனங்களின் போராட்டத்தில் உயிர்க்கொடை தவிர்க்க முடியாத ஒரு வகிபாகம் என்கிறது

‘நந்திக்கடல்’.


கேணல் ராயூ ‘உயிராயுதங்கள்’ சுமக்கும் கந்தகத்தின் அளவை சரியாக கணித்து அதன் உச்ச பயன்பாட்டை நிறுவிக் காட்டியவர்.


ஒரு சிறிய தேசம் அணு ஆயுத உலகையே நிர்மூலம் செய்து இராணுவ தொழில் நுட்ப ரீதியாக புதிய உலக ஒழுங்கை படைத்து தேசிய இனங்களை விடுவிக்கும்

புது வியூகத்தை வகுத்த பிரபாகரனியத்தின் இராணுவ தொழில்நுட்ப சிந்தனையின் ஒரு மூலோபாய வடிவம்தான் கேணல் ராயூ.


வரலாறு அவரை இவ்வாறே நினைவு கொள்ளும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.