கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

 அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (26) கொழும்பு பங்கு பரிவர்த்தனை


வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது..


அதாவது, அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

முன்னதாக 2021 ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த நிலையில் இதன்போது 8,812.01 புள்ளிகளாக அனைத்து பங்கு விலைச்சுட்டெண் பதிவாகி இருந்தது.

அதன்படி, இன்றைய தினம் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 164.08 புள்ளிகள் அல்லது 1.87% ஆல் அதிகரித்துள்ளது.

இன்றைய மொத்த புரள்வு ரூ. 10.49 பில்லியனாக பதிவாகி உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.