ஆயுர்வேத மருந்துகள் வீடுகளுக்கு விநியோகம்

 


மேல் மாகாணத்தில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை இலவசமாக விநியோகிக்கும் திட்டம் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டது.


இத்திட்டம் மேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.

அத்துடன், 265 வைத்தியர்களின் முழு மேற்பார்வையின் கீழ், கொரோனா நோயாளர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கின்றன செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் மேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மேல் மாகாணத்தில் உள்ள 40 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகள் நோயாளிகளுக்கு தினமும் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதேவேளை, ஆயுர்வேத மருத்துவத்தை நாடும், வீடுகளிலிருந்து சிகிச்சை பெற விரும்பும் கொவிட் நோயாளர்களுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக இந்த திட்டம் தொடர்ந்தும் செயலில் இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.