இரத்த வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்

 


எதிர்நோக்கப்படும் அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய இரத்த மாற்று நிலையம் நன்கொடையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.


தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டு நிலையில், இரத்தம் சேகரிப்பதற்காக நடமாடும் இரத்த முகாம்களை மேற்கொள்ளல், மக்களை ஒன்றுகூட்டல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வது மிக அனர்த்த நிலை என்பதனால் இரத்த நன்கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை சேகரிப்பதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,புற்று நோய், தலசீமியா, லியுகேமியா போன்ற நோயாளர்களுக்கும், திடீர் விபத்துகளினால் பலத்த காயமடைபவர்கள், அவசர சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் பிரசவத்திற்காக உள்ள தாய்மார்களுக்கும், தேவையான இரத்தத்தை குறை இன்றி வழங்குவதற்கு இரத்தம் சேகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்கு இரத்தம் தேவைப்படுவதனால், இரத்தத்தின் தேவையை முன்கூட்டியே தயார் நிலையில் வைக்க வேண்டும். கடந்த வார இறுதியில் தேசிய இரத்த மாற்று நிலையத்தில் காணப்பட்ட இரத்தப் பற்றாக்குறையை நன்கொடையாளர்கள் ஒன்றிணைந்து தீர்த்து வைத்தனர் என்று தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 87 இரத்த சேகரிப்பு நிலையங்கள் காணப்படுகின்ற. எனவே,தேசிய இரத்தமாற்று நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, இரத்த தானம் செய்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதன் மூலம் இரத்த தானம் செய்வதற்கு ஒன்றிணையுமாறு வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கேட்டுக்கொண்டார்.

இதற்கமையm தற்போதைய கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதார முறைப்படி இரத்ததானம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.