முச்சக்கரவண்டி விபத்து - 5 மாத குழந்தை உட்பட மூவர் பரிதாப பலி!

 


பாதுக்க – கொடகம வீதியில் வடரெக்க சந்தியில் லொறியுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதி , அதில் பயணித்த 5 மாத பெண் குழந்தை மற்றும் குழந்தையின் பாட்டி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தின்போது குழந்தையின் தாயாரும் முச்சக்கர வண்டியில் இருந்த நிலையில் , படுகாயமடைந்த அவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் லொறி சாரதியை கைது செய்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.