அம்பாறை மாவட்டச் சிறுமியின் அபார சாதனை!

 


அம்பாறை – நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜே.பாத்திமா அனத் ஜிதாஹ் “கிறேன் மாஸ்டர்” மகுடத்தையும் ஆசிய நாடுகளின் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் “Fastest to Identify Flags of all Asian Countries” என்ற பட்டத்தையும் வென்று இலங்கை நாட்டுக்கும் தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

எம்.எல்.எம்.ஜெஸீம் யு.கே.பாத்திமா ஜவ்ஹறா தம்பதிகளின் செல்வ புதல்வியான இவர், அனைத்து ஆசிய நாடுகளின் கொடிகளையும் மிக வேகமாக அடையாளம் கண்ட முதல் ஆசிய சிறுமி எனும் மகுடத்தை பெற்றுள்ளார்.

03.12.2016 இல் பிறந்த இவர், தனது 4ஆவது வயதில் ஆசிய நாடுகளின் கொடிகளை 24 வினாடிகளில் வேகமாக அடையாளம் கண்டு ஆசிய சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதித்துள்ளார்.

சிறு வயதிலேயே சிறந்த ஞாபக சக்தியும் பல திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர், ஆங்கிலத்தை சரளமாக வாசிக்க, எழுத, பேச கற்றுக்கொண்டதுடன், கணிதம் உள்ளிட்ட பாடங்களிலும் மிக தேர்ச்சியாக திகழ்கின்றார்.

“கிரேன் மாஸ்டர்” எனும் மகுடத்தை பெற்றுக்கொள்கின்ற நிந்தவூர் மண்ணின் இரண்டாவது சிறுமியாக இவர் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.