தலிபான்கள் அரசுடன் நட்புரீதியாக செயல்படத் தயார்- சீனா

 


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியாக செயல்படத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவரும் நிலையிலேயே சீனா நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.


ஏற்கனவே, ஆப்கானிஸ்தான் தலிபான் அரசை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளது. அத்துடன் தலிபான் செயல்பாட்டை பொறுத்துதான், முடிவு எடுக்கப்படும் என ரஷியாவும் தெரிவித்துள்ளது.


ஆசிய பகுதியில் அமெரிக்காவின் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் சீனாவின் விருப்பம். தற்போது அமெரிக்க விலகலை சீனா மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.