கொழும்பில் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்!

 


கொழும்பு 1- 15 இல் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களை வழங்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

. எவருக்கும் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் எனின், தடுப்பூசி அட்டை, தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டின் இரு பக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை epidunitcmc@gmail.com எனும் இணைய முகவரிக்கு அனுப்புமாறு கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர். டினு குருகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் சான்றிதழ் தயாரானவுடன் அது பெறுநருக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.