மீன் பொடிமாஸ்!!

 


தேவையான பொருட்கள்:


1. முள் அதிகமில்லாத மீன் (வேகவைத்து உதிர்த்தது) - 200 கிராம்

2. சின்ன வெங்காயம் - 100 கிராம்

3. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

4. கடுகு - 1/2 தேக்கரண்டி

5. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

6. சீரகம் - 1/2 தேக்கரண்டி

7. சோம்பு - 1/2 தேக்கரண்டி

8. பச்சை மிளகாய் - 3 எண்ணம்

9. இஞ்சி - சிறிய துண்டு

10. பூண்டு - 2 பல்

11. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி

12. கருவேப்பிலை - சிறிது

13. மல்லித்தழை - சிறிது

14. உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.

2. சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.

3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

4. தாளிசத்துடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.

5. அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து வதக்கவும்.

6. பின்னர் அதில், உதிர்த்த மீனைப் போட்டு நன்கு பிரட்டி விடவும்.

7. பின்னர் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி விடவும்.

8. கடைசியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.